பவித்ரா நந்தகுமார் எழுதிய தீயும் பஞ்சானதோ? நீயும் விரும்பினாயோ?

குலமகளே
உன் உதிரமா அவர்கள்
இல்லையே
ஆனாலும் துடித்தாயம்மா
ஏழு பேர் விடுதலை
உன் மூச்சானதே
அக்கினியும் உன்
உரு ஆனதே
செங்கொடியே
துளிர் விட முன்பே
துளிர் விட்டு
எரிந்தது உன் தேகம்
முத்துக்குமார் மூட்டியா
தீயோ
அணையவில்லை
நீயும் விளக்கில்
எண்ணை போல்
சுடரேற்றி சென்றாயே
வல்லாதிக்கம்
மௌனம் காத்த
நேரம் உன் எதிரொலி
ஆடித்தான் போனான்
இந்தியனும்.

பறையடித்து கலை
வளர்த்து
தமிழ் உணர்வு
கொடுத்து
ஆடிய பாதம்
மண்ணில் துடிதுடித்து
விழுந்த போதும்
அடங்கவில்லை
இந்தியத்தின் இயந்திர முகம்

தூக்கு கயிறும்
துரும்பாகும்
ஒரு நாள்
என் ஈகம் பறைசாற்றும்
விரைவில்
ஈழத்தமிழர் மறக்கவில்லை
உன் திரு வதனம்
கண்ணுக்குள் வாழ்கிறாய்
தினமும்
நீ மூட்டியது
வெறும் தீயல்ல
விடுதலை வேட்கையம்மா!!


ஆக்கம் பவித்ரா நந்தகுமார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக